தமிழகத்தில் 9 மாவட்டத்தில் வெப்பச் சலனத்தால் மழை பெய்ய வாய்ப்பு

0 1347

தமிழகத்தில் வெப்பச்சலனத்தால் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும் எனத் தெரிவித்துள்ளது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

மாலத்தீவு, லட்சத்தீவுப் பகுதிகளில் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் அந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாக நாகர்கோவில், இரணியல் ஆகிய பகுதிகளில் 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மயிலாடியில் 5 சென்டிமீட்டரும், தக்கலை, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஆகிய இடங்களில் 4 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments