ஒப்பந்த அடிப்படையில் 2570 செவிலியர்களை பணி அமர்த்த முதலமைச்சர் உத்தரவு

0 2182

ஒப்பந்த அடிப்படையில் 2570 செவிலியர்கள் அடுத்த 6 மாத காலம் பணியில் இருப்கொரோனா வைரஸ் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு, மேலும் 2 ஆயிரத்து 570 ஒப்பந்த செவிலியர்களை பணியமர்த்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் ஏற்கனவே 530 மருத்துவர்கள், 2323 செவிலியர்கள், 1508 ஆய்வக நுட்பனர்கள் மற்றும் 2 ஆயிரத்து 715 சுகாதாரஆய்வாளர்கள்பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, 6 மாத காலததிற்கு ஒப்பந்த அடிப்படையில் மேலும் 2 ஆயிரத்து 570 செவிலியர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டு வருகிறது. இச்செவிலியர்கள், ஆணை கிடைக்கப் பெற்ற மூன்று நாட்களுக்குள், பணியில் இணைய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கு தலா 40 செவிலியர்களும், தாலுகா மருத்துவமனைகளுக்கு தேவைக்கேற்ப 10 முதல் 30 செவிலியர்களும் பணியமர்த்தப்படுவார்கள். இதன் மூலம் கொரோனா தடுப்பு பணிகள் மேலும் வலுவடையும் என அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments