நீதி பரிபாலனம், பணமும், அதிகாரம் படைத்தவர்களுக்கு மட்டுமே சாதகமாக உள்ளது-நீதிபதி தீபக் குப்தா ஆதங்கம்

0 979

நாட்டின் நீதி பரிபாலனம், பணமும், அதிகாரம் படைத்தவர்களுக்கு மட்டுமே சாதகமாக உள்ளது என ஓய்வு பெறும் உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா ஆதங்கப்பட்டுள்ளார்.

நீதிபதி தீபக் குப்தாவுக்கு காணொலி காட்சி வாயிலாக பிரிவுபசாரம் நடத்தப்பட்டது. அப்போது பேசிய அவர், அடித்தட்டு, விளிம்பு நிலை மக்களிடம் பணம் இல்லை என்பதால் அவர்களுக்கு நீதி மறுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார். இதை கண்டும் காணாமலும், நெருப்புக்கோழி தலையை மண்ணில் புதைப்பது போல நீதிபதிகள் இருக்கக்கூடாது என அவர் கேட்டுக் கொண்டார்.

ஏழைகளுக்கு நீதி கிடைக்க ஏதாவது செய்யுங்கள் என நீதிபதிகளை கேட்டுக் கொண்ட அவர், வழக்கறிஞர்கள் அரசியல் விவாதங்களில் அனல் பறக்க பேசுவதை விட்டு விட்டு நீதிமன்றங்களில் திறமையாக வாதாடுமாறு வலியுறுத்தினார். 2017 ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றவர் தீபக் குப்தா. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments