கொரோனா எதிரொலி: இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவு

0 690

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பின் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் நிறைவடைந்துள்ளது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 242 புள்ளிகள் சரிந்து, 31 ஆயிரத்து 443 ஆக நிலைகொண்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 56 புள்ளிகள் குறைந்து 9 ஆயிரத்து 215 ஆக நிறைவு பெற்றது.

வங்கி, எப்எம்சிஜி, மருந்து துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன. 3வது காலாண்டில் எதிர்பாராவிதமாக எஸ் வங்கி 2 ஆயிரத்து 628 கோடி ரூபாய் லாபம் ஈட்டியிருப்பதாக அறிவித்ததை அடுத்து, அந்த நிறுவனத்தின் பங்குகள் 20 சதவீதம் வரை உயர்ந்தது.

வர்த்தக இறுதியில் 6 சதவீத உயர்வுடன் ஒரு பங்கின் விலை 28 ரூபாயாக இருந்தது. புத்த பூர்ணிமாவை முன்னிட்டு அன்னிய செலாவணி சந்தைக்கு விடுமுறை என்பதால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மாற்றமின்றி 75 ரூபாய் 76 காசுகளாகவே இருந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments