கொரோனாவுக்கு எதிரான போரில் சோர்வு ஏற்பட்டு போராடுவதை நிறுத்திவிடுவது எதற்கும் தீர்வாகாது-பிரதமர் மோடி

0 1072
அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிராக போராட வேண்டும்

அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிராக போராட வேண்டும் என்றும், சோர்வு ஏற்பட்டு போராடுவதை நிறுத்திவிடுவது எதற்கும் தீர்வாகாது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புத்தர் பிறந்த நாளான புத்த பூர்ணிமா இன்று கொண்டாடப்படுகிறது.

இதை முன்னிட்டு, மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகமும், சர்வதேச புத்தமத கூட்டமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், வீடியோகான்பரன்ஸ் முறையில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

புத்தரின் போதனைகள் பற்றி அப்போது குறிப்பிட்ட மோடி, அனைத்து உயிர்களும் துன்பங்களில் இருந்து விடுபட வழிகாட்டுவதே இந்தியாவின் கலாச்சாரம் என்றார்.

இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் மற்றவர்களுக்காக உதவுவதற்காகவும், சட்டம்-ஒழுங்கை பராமரிக்கவும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும் தூய்மையை பேணவும் 24 மணி நேரமும் பணியாற்றுபபவர்கள் பாராட்டுக்குரியவர்கள் என்பதோடு, கவுரவத்திற்கு உரியவர்கள் என்றும் அவர் கூறினார். இந்தியா தொடர்ந்து பிற நாடுகளுக்கு உதவும் என்றும் மோடி உறுதிபடத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments