குடிநீர் பிடிக்கும்போது தனி நபர் இடைவெளியை கடைபிடிக்க வழிவகை

0 531

சென்னையில் குடிநீர் பிடிக்கும்போது தனி நபர் இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் 1000 தெருக்களில் குழாய் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக உள்ளாட்சித் துறை சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அமைச்ச எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது.

அப்போது லாரிகள் மூலம் குடிதண்ணீர் வழங்கப்பட்ட 1000 தெருக்களில் குழாய்கள் மூலம் தண்ணீர் வழங்கும் வகையில் தற்போது வினியோகிக்கப்படும் 650 எம்.எல்.டி தண்ணீருடன் 50 எம்.எல்.டி. உயர்த்தி 700 எம்.எல்.டி. தண்ணீர் வழங்க அமைச்சர் உத்தரவிட்டதாக அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் இருந்து பெறப்பட்ட 7.6 டி.எம்.சி. கிருஷ்ணா நீரில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 6.3 டி.எம்.சி. இருப்பதாகவும் அது இந்த ஆண்டுக்குப் போதுமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments