39 கோடி மக்களுக்கு ரூ.34,800 கோடி நிதி உதவி வழங்கியது மத்திய அரசு

0 927
ஜன்தன் வங்கி கணக்குகளில் 2வது கட்டமாக ரூ.2785 கோடி டெபாசிட்

மே 5 ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் ஏறத்தாழ 39 கோடி பேர் மத்திய அரசிடம் இருந்து 34 ஆயிரத்து 800 கோடி ரூபாயை நிவாரணமாக பெற்றுள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்கி வருகிறது. இதுவரை 8 கோடியே 19 லட்சம் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் 16 ஆயிரத்து 394 கோடி ரூபாய் டொபாசிட் செய்யப்பட்டுள்ளது.

20 கோடி பெண்களின் ஜன்தன் வங்கி கணக்குகளில் முதல்கட்டமாக 10 ஆயிரத்து 25 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டமாக 5 கோடியே 57 லட்சம் பெண்களின் கணக்குகளில் 2785 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது.

கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள 2 கோடியே 20 லட்சம் பேர் மொத்தம் 3 ஆயிரத்து 492 கோடி ரூபாயை நிவாரணமாகப் பெற்றுள்ளனர். முதியோர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட 2 கோடியே 28 லட்சம் பேருக்கு 1405 கோடிரூபாய் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments