மேற்கு வங்கத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் அதிகரிக்கும் உயிரிழப்பு

0 1696

மேற்கு வங்கத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.

அந்த மாநிலத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும் 80 பேர் உயிரிழந்ததால் பலியானவர்கள் எண்ணிக்கை 140 ஆக அதிகரித்துள்ளது. ஆனால் 72 பேர் மற்ற நோயின் காரணமாக உயிரிழந்திருப்பதாக மேற்கு வங்க மாநிலத்தின் தலைமை செயலாளர் ராஜிவா சின்ஹா தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 85 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1344 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 364 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நாட்டிலேயே கொரேனா நோயாளிகளின் இறப்பு விகிதம் மேற்குவங்கத்தில் தான் அதிகம் இருப்பதாகவும், அதற்கு குறைந்த அளவு பரிசோதனை மேற்கொள்வது, போதிய கண்காணிப்பு இல்லாததே காரணம் என்று மத்திய குழு குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments