கர்நாடகாவில் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்வதற்கான சிறப்பு ரயில்கள் ரத்து

0 3241

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவைக் கட்டுமானத் தொழில் அதிபர்கள் சந்தித்துப் பேசியதை அடுத்து வெளிமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்வதற்கான சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கொரோனா பாதிப்பு குறைந்த ஆரஞ்ச், பசுமை மண்டலங்களில் கட்டுமானத் தொழிலைத் தொடங்க கர்நாடக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் தொழிலாளர்கள் வெளியேறினால் கட்டுமானத் தொழிலுக்கு ஆட்கள் கிடைக்காமல் போய்விடும் என்பதற்காக முதலமைச்சர் எடியூரப்பாவைக் கட்டுமானத் தொழில் அதிபர்கள் சந்தித்துப் பேசினர்.

இதையடுத்துக் கட்டுமானத் தொழிலாளர்களின் வேலையும் ஊதியமும் உறுதி செய்யப்படும் எனக் கூறியுள்ள எடியூரப்பா, தொழிலாளர்கள் வெளியேற வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். இதனிடையே தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்வதற்காக இயக்கப்பட இருந்த சிறப்பு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments