வெளிமாநிலத்தவர்களை சொந்த மாநிலத்துக்கு அனுப்புவதற்கான வழிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

0 1381

வெளிமாநிலத்தவர்களை சொந்த மாநிலத்துக்கு அனுப்புவதற்கான வழிகாட்டு முறைகளை அரசாணையாக வெளியிட்டுள்ள தமிழக அரசு, போக்குவரத்துக்கான செலவை அந்தந்த மாநில அரசுகளே ஏற்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

மத்திய அரசு அறிவுறுத்தலின் படி பிற மாநில தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்புவதற்காக ஐஏஎஸ் அதிகாரி அதுல்ய மிஸ்ராவை நியமித்த தமிழக அரசு, தற்போது அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசாணையாக வெளியிட்டுள்ளது.

அதன்படி மாநில அளவில் ஒரு குழு அமைக்கப்பட்டதோடு, மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களும், சென்னைக்கு மாநகராட்சி ஆணையரும் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வெளி மாநிலத்துக்கு செல்ல விரும்புவோர், தமிழகம் வர விரும்புவோர் nonresidenttamil.org என்ற இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எத்தனை பேரை அனுப்புவது, ஏற்பாடுகளை செய்வது உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சியர்களே முடிவு செய்ய வேண்டும். கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல், முகக்கவசம், தனிநபர் இடைவெளி உள்ளிட்டவற்றை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments