கொரோனா பரவியது எப்படி- எல்லா உண்மைகளையும் சீனா கூறவேண்டும் - அதிபர் டொனால்ட் டிரம்ப்

0 2795

கொரோனா வைரஸ் தோன்றியது எப்படி என்பது தொடர்பான அனைத்து உண்மைகளையும் சீனா மறைக்காமல் வெளியிட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

இதுபோல் மீண்டும் நிகழாமல் இருப்பதற்காக சீனா கொரோனா தொடர்பான அனைத்து உண்மைகளையும் வெளிப்படையாக கூற வேண்டும் என்றும் டிரம்ப் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, சீனாவின் வூகான் ஆய்வுக்கூடத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவியதற்கான முக்கியமான ஆதாரம் இருப்பதாக தெரிவித்தார். அமெரிக்க உளவுத்துறையினர் கொரோனா வைரஸ் மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டதல்ல என்று தெரிவித்த அறிக்கையை அவர் மறுக்கவோ விவாதிக்கவோ இல்லை. அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை வூகான் ஆய்வுக்கூடம் மறுத்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments