உத்தரப் பிரதேசத்தில் 9 மணி நேரத்தில் ரூ.100 கோடிக்கு மது விற்பனை

0 1233

உத்தரப் பிரதேசத்தில் 9 மணி நேரத்தில் 100 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.

ஊரடங்கு அமல்படுத்தும் முன்பு, உத்தரப் பிரதேசத்தில் நாள்தோறும் 70 கோடி ரூபாய் முதல் 80 கோடி ரூபாய் வரை மதுபானங்கள் விற்பனையாவது வழக்கம். ஊரடங்கால் உத்தரப் பிரதேசத்திலிருக்கும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபான கடைகள் 40 நாள்களுக்கும் மேலாக பூட்டப்பட்டு இருந்ததால் மதுபிரியர்கள் பெரும் அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு நேற்று மீண்டும் மதுகடைகள் திறக்கப்பட்டதால் அக்கடைகளில் போட்டி போட்டு மதுபிரியர்கள், மதுவகைகளை வாங்கி சென்றனர். இதனால் பெரும்பாலான இடங்களில் நண்பகலிலேயே ஸ்டாக் தீரும் நிலை நேரிட்டது. மாநிலம் முழுவதும் சாதனை அளவாக 100 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. குறிப்பாக, தலைநகர் லக்னோவில் 6 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மதுபானங்கள் விற்றுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments