பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மலுக்கு 3 ஆண்டுகள் தடை

0 3135

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மலுக்கு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் மூன்று ஆண்டுகள் தடை விதித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு உமர் அளித்த பேட்டியில், போட்டி ஒன்றில் இரண்டு பந்துகளை விளையாடாமல் தவிர்த்தால் தனக்கு ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் தருவதாக சிலர் அணுகியதாகக் கூறினார். அதேபோல் இந்தியாவுக்கு எதிரான தொடரில் இரண்டு போட்டிகளில் விளையாடாமல் இருந்தால் பணம் தருவதாகவும் சிலர் தம்மிடம் கூறியதாகவும் உமர் அக்மல் தெரிவித்திருந்தார். இந்தப் பேச்சு அந்த நாட்டு கிரிக்கெட் வாரிய விதிகளின் படி, தவறு என்பதால் உமர் அக்மலுக்கு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் மூன்று ஆண்டுகள் தடை விதித்து, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments