சென்னையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில் 30 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

0 1132
சென்னையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில் 30 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில் 30 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

அங்கு 95 பேர் கொரோனா சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கடந்த 14 நாட்களில் இந்த 30 பேருக்கும் இரண்டு முறை பரிசோதனை நடத்தி, தொற்று குணமானது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர்களை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கைத்தட்டி, வாழ்த்தி வழியனுப்பிவைத்தனர்.

மருத்துவர்கள் செவிலியர்கள் தங்களை மிகவும் கனிவுடன் கவனித்து கொண்டதாகவும், குணமடைந்தவர்கள் தெரிவித்தனர்.

குணமடைந்த 30 பேரில் 25 பேர் டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பியவர்கள், எஞ்சிய 5 பேர் அவர்களின் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments