ஊரடங்கால் டிராக்டரைக் கொண்டு உழுது கீரைகளை விவசாயிகளே அழிக்கும் சோகம்

0 1417
பெரும் பரப்பளவில் பயிரிட்ட கீரைகளை அனுப்ப முடியாத விவசாயிகள்

அமெரிக்காவில் விளைபொருட்களை விற்க முடியாத நிலையில் கலிபோர்னியா விவசாயிகள் பயிரிட்டிருந்த கீரைகளை டிராக்டரைக் கொண்டு உழுது அழித்து வருகின்றனர்.

கலிபோர்னியாவின் ஹால்ட்வில் என்னும் ஊரைச் சேர்ந்த ஜாக் வாசி, தேவ் புக்லியா ஆகியோர் பல நூறு ஏக்கர் பரப்பில் கீரை வகைகளைப் பயிரிட்டு அறுவடை செய்து மிகப்பெரிய உணவகங்களுக்கு அனுப்பி வைப்பது வழக்கம். கொரோனா பாதிப்பால் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால் உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் கீரைகளைச் சந்தைப் படுத்த முடியாததால் அவற்றைத் தாங்களே டிராக்டர்களைக் கொண்டு உழுது அழித்து வருகின்றனர்.

ரத்தம், வியர்வை, கண்ணீர் சிந்தி வளர்த்த கீரைகளை அழிப்பது வருத்தமாகத்தான் உள்ளதாகவும், எனினும் வேறு வழியில்லை எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

நாள்தோறும் ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான கீரைகள் அனுப்பும் ஆர்டர்களை இழந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments