ஏப்-8 காலை 11 மணிக்கு காணொலி மூலம் அனைத்துக் கட்சிக் கூட்டம்- பிரதமர் மோடி அழைப்பு

0 1393

இம்மாதம் 8ஆம் தேதி காணொலி மூலம் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

கொரோனா வைரசை பரவாமல் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இது தொடர்பாக மாநில முதலமைச்சர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்திய மோடி பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக உள்நாட்டு தலைவர்களுடனும் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். ஏப்ரல் 8ம் தேதி காலை 11 மணியளவில் காணொலி மூலம் நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த இருப்பதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் 5க்கும் மேற்பட்ட எம்பிக்கள் கொண்ட கட்சிகளை சேர்ந்த தலைவர்களுடன் மோடி காணொலி மூலம் கலந்துரையாட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments