இலவச பணிநியமன விளம்பரங்களை வெளியிட LinkedIn முடிவு

0 1264

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் பல்வேறு வகையான வேலைவாய்ப்பு விளம்பரங்களை இலவசமாக வெளியிடுவதாக சர்வதேச தொழில்சார் இணையதளமான LinkedIn தெரிவித்துள்ளது.

மருத்துவப் பணிகள், சூப்பர்மார்க்கெட் வேலைகள், சரக்கு டெலிவரி, கிட்டங்கிப் பணிகள், பேரிடர் நிவாரணப் பணிகள் உள்ளிட்ட வேலைவாய்ப்புகளுக்கான விளம்பரங்கள் இலவசமாக வெளியிடப்படும்.

இந்த நெருக்கடியான காலகட்டத்தில் அத்தியாவசிய துறைகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான விளம்பரங்கள் ஏப்ரல் 1 முதல் ஜூன் மாதம் வரை வெளியிடப்படும் என LinkedIn கூறியுள்ளது.

அதேபோன்று மிகவும் முக்கியமான மருத்துவ பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய அது சம்பந்தமான நிறுவனங்கள் அடுத்த 3 மாதங்களுக்கு LinkedIn Talent Insights வசதியை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அது அறிவித்துள்ளது.

அவசரமாக ஆட்களை பணிக்கு எடுக்க விரும்பும் நிறுவனங்களுக்கு LinkedIn -ன் Recruiting For Good சேவையின் படி அதன் நிபுணர்கள் உதவுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments