SI மீது காரை மோதி விபத்து ஏற்படுத்தியவர் கைது

0 1075

தருமபுரி அருகே, 144 தடை உத்தரவை மீறி வலம் வந்தவர்களை வழிமறித்த காவல் உதவி ஆய்வாளர் மீது, காரை மோதி விபத்து ஏற்படுத்தியவரை போலீசார் கைதுசெய்தனர்.

வெள்ளிசந்தை அருகே, பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சாரதி என்பவர், அவ்வழியே வந்த கார் ஒன்றை சோதனை செய்வதற்காக வழிமறித்துள்ளார். ஆனால் காரை நிறுத்தாத ஓட்டுநர்,உதவி ஆய்வாளர் சாரதி மீது மோதிவிட்டு அதிவேகத்துடன் அங்கிருந்து தப்பியுள்ளார்.

இதையடுத்து சக காவலர்கள் காரை துரத்திச் சென்ற நிலையில், பொதுமக்கள் உதவியுடன் கார் மடக்கிப் பிடிக்கப்பட்டது. காரில் இருந்த 3 பேர் தப்பியோடிய நிலையில், காரை ஓட்டிவந்த பழனி என்பவர் கைதுசெய்யப்பட்டார். கார் மோதி, பலத்த காயமடைந்த உதவி ஆய்வாளர் சாரதி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments