உகானில் 6 முக்கிய சுரங்க பாதைகளில் மீண்டும் ரயில் போக்குவரத்து

0 2096

சீனாவின் உகானில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதை அடுத்து, 6 முக்கிய சுரங்க பாதைகளில் 2 மாதங்களுக்கு பிறகு ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

உகானில் இருந்து பிற பகுதிகளுக்கு கொரோனா பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை சீனா எடுத்தது. அப்போது 6 முக்கிய சுரங்க ரயில் பாதைகளை சீனா மூடியது.

பின்னர் எடுக்கப்பட்ட நடவடிக்கையில், உகானில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து அண்மையில் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக தற்போது சுரங்க பாதைகளில் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments