கொரோனா பாதிப்பு : சீனாவை விஞ்சியது அமெரிக்கா

0 6855

உலக அளவில் கொரோனா பாதிப்பு பட்டியலில் சீனாவை விஞ்சி அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது.

சீனாவில் 81 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், உலக அளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடாக அந்நாடு இருந்தது. இந்நிலையில் அமெரிக்காவில் நேற்று நூற்றுகணக்கானோருக்கு கொரோனா புதிதாக உறுதி செய்யப்பட்டதால், சீனாவை அந்நாடு விஞ்சியது.

இதேபோல் அமெரிக்காவில் இன்றும் 150க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அமெரிக்காவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 85 ஆயிரத்து 500ஐ தாண்டியுள்ளது.

இதுபோல் அமெரிக்காவில் நேற்று 270 பேர் உயிரிழந்த நிலையில், இன்று மேலும் 5 பேர் பலியாகியுள்ளனர். இந்த எண்ணிக்கையுடன் சேர்த்து அமெரிக்காவில் கொரோனாவுக்கு மரணமடைந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை 300 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் 82 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரில் 2 ஆயிரத்து 100 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என தகவல்கள் கூறுகின்றன.

அமெரிக்காவில் அதிகபட்சமாக நியூயார்க் மாகாணத்தில் 37 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அந்த மாகாணத்தில் இதுவரை 387 பேர் உயிரிழந்துள்ளதால், அமெரிக்காவில் கொரோனாவின் மையமாக நியூயார்க் மாகாணம் உருவெடுத்துள்ளது.

நியூயார்க் மாகாணத்துக்கு அடுத்து அதிகபட்சமாக நியூஜெர்சியில் 6 ஆயிரத்து 900 பேரும், கலிபோர்னியாவில் 3 ஆயிரத்து 900 பேரும், வாஷிங்டனில் 3 ஆயிரத்து 200 பேரும், மிச்சிகனில் 2 ஆயிரத்து 900 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments