டிரைவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் அளித்த கார்களை திரும்ப அளிக்க OLA உத்தரவு

0 1663

ஊரடங்கு காரணமாக கார்களை இயக்க முடியாத நிலை நிலவுவதால், நாடு முழுவதும் ஒப்பந்தத்தில் (Lease) டிரைவர்களுக்கு அளித்திருக்கும் கார்களை திரும்ப ஒப்படைக்க ஓலா (ola) நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

செயலி அடிப்படையில் கார்களை இயக்கும் ஓலா நிறுவனம், ஊரடங்கு காரணமாக தனது சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. மேலும் ஒப்பந்தத்தில் அளித்த கார்களை இயக்கி வரும் டிரைவர்களிடம் நாள் கணக்கில் பெறும் வாடகை கட்டணத்தை தள்ளுபடி செய்வதாகவும் ஓலா அறிவித்திருந்தது.

இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக நாடு முழுவதும் 30 ஆயிரம் டிரைவர்களிடம் ஒப்பந்த அடிப்படையில் அளித்திருக்கும் கார்களை திரும்ப ஒப்படைக்க ஓலா உத்தரவிட்டுள்ளது. ஓலா நிறுவனம் உத்தரவிட்டபோதிலும், ஊரடங்கால் கார்களை இயக்க முடியாததால், டிரைவர்களால் திரும்ப அளிக்க முடியாத நிலை நிலவுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments