கொரோனா தொற்றால் சுவை, வாசனை திறனை இழந்துவிட்டதாக பாடகர் உருக்கம்

0 2229

கொரோனா தொற்று ஏற்பட்டதால் சுவை மற்றும் வாசனை திறனை இழந்து விட்டதாக ஹாலிவுட் நடிகரும், பிரபல அமெரிக்க பாப் பாடகருமான ஆரோன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அவரது இன்ஸ்டாகிராம் பதிவில், தனக்கு கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் தெரிந்ததால் உடனடியாக பரிசோதனை செய்ததாகவும், அதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ள ஆரோன், கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தானது என்றும் இதனால் தான் வாசனைத் திறனையும், சுவையையும் இழந்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments