ஊரடங்கால் கேஸ் சிலிண்டர் கிடைக்குமோ, கிடைக்காதோ என மக்கள் அச்சம்

0 4273

ஊரடங்கு காரணமாக கேஸ் சிலிண்டர் கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற அச்சத்தில், பொதுமக்கள், பெருமளவில் புக்கிங் செய்து வருவதால், இன்டேன் கேஸ் சேவை பாதிக்கும் சூழல் உருவாகி உள்ளது.

சென்னை மாநகரில் நாளொன்றுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் 85 ஆயிரம் சிலிண்டர்கள் புக்கிங் செய்யப்படுவது வழக்கம்.  தற்போது, நாளொன்றுக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 35 ஆயிரம் சிலிண்டர்கள் வரை புக்கிங் செய்யப்பட்டு வருகின்றன.

வீடுகளில் கைவசம் காலி சிலிண்டர்கள் இருந்தால் மட்டுமே புதிய சிலிண்டர்களை விநியோகிக்க முடியும் .ஆனால்,  அச்சம் காரணமாக  இவ்வாறு,  ஒரே நேரத்தில் அதிக அளவில் மக்கள்,  சிலிண்டர்களை புக்கிங் செய்வதால்,  குறைந்த அளவிலான ஊழியர்களை கொண்டு, கேஸ் தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் சிக்கல் உருவாகியுள்ளதாக அதிகாரிகள் தெனிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments