காலில் விழுந்து கேட்கிறேன்... வெளியில் வராதீங்க என கை எடுத்து கும்பிடும் போலீசார்..!

0 8293

சென்னை அண்ணா சாலையில் 144 தடை உத்தரவை மீறி வெளியே வந்தவர்களை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் கைக்கூப்பி வணங்கி வீடுகளிலேயே இருங்கள் என அறிவுறுத்திய வீடியோ பகிரப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், ஸ்பென்சர் பிளாசா அருகே சிறப்பு காவல் உதவி ஆய்வளர் ரஷீத் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்.

அப்பொழுது இருசக்கர வாகனம் மற்றும் காரில் வந்தவர்களை தடுத்து நிறுத்திய ரஷீத், அவர்களை இரு கைக்கூப்பி வணங்கியதோடு கொரோனா பரவி வரும் நிலையில் தீவிரத்தை உணராமல் வெளியே வர வேண்டாம் என்வும், வீடுகளிலேயே இருங்கள் என்றும் கேட்டுக் கொண்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments