பிளிப்கார்ட் நிறுவனத்தின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

0 3369

கொரோனா பரவாமல் தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக ஆன்லைன் விற்பனை நிறுவனமான பிளிப்கார்ட் தனது சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.

அமேசான் இந்தியா நிறுவனம் தனது சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ஏற்கெனவே அறிவித்துள்ளது. இதையடுத்து தற்போது பிளிப்கார்ட் நிறுவனமும் தனது இணையதள பக்கம் மற்றும் செயலியில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், இதுவொரு கடினமான நேரம் என்றும், முன்பு எப்போதும் இதுபோல இருந்ததில்லை, ஆதலால் வீடுகளில் இருந்து வெளியேறாமல் தேசத்துக்கு உதவுவோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது இணையதளத்தில் இருந்து பொருள்கள் பட்டியலை நீக்கியுள்ள பிளிப்கார்ட், பேமன்ட் சேவையை மட்டும் வைத்துள்ளது.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments