வீட்டு கண்காணிப்பிற்கு ஒத்துழைக்காதவர்கள் முகாமிற்கு அழைத்து செல்லப்படுவர் - சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

0 869

சென்னை மாநகராட்சியில் வீட்டு கண்காணிப்பில் இருப்பவர்கள் உத்தரவை மீறி வெளியே வந்தால், வலுக்கட்டாயமாக அரசின் முகாமிற்கு அழைத்து செல்லப்படுவார்கள் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார்.

144 தடை உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்பு செய்தியாளர்களை சந்தித்த பிரகாஷ், கண்காணிப்பில் இருப்பவர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளுதல் அவசியம் என கூறினார். தொடர்ந்து, மாநகராட்சிக்கு உட்பட்ட கோயம்பேடு, சிந்தாதிரிப்பேட்டை போன்ற பெரிய காய்கறி சந்தைகளில் சில்லரை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments