குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டால் டேங்கர் லாரிகள் மூலம் விநியோகிக்க அறிவுறுத்தல்

0 2094

குழாய்கள் மூலம் குடிநீர் வழங்குவதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் உடனடியாக டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட வேண்டும் என, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், அதன் பணியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், குடிநீர் சம்மந்தப்பட்ட பணிகளில் ஏதேனும் குறைபாடுகள் நிகழ்ந்தால், போர்க்கால அடிப்படையில் ஊழியர்கள் அதனை சரிசெய்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் செயல்பட வேண்டும் என  குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஒப்பந்த ஊழியர்களில் முதியோர், நோயுற்றோர் மற்றும் சந்தேகத்திற்குரிய நபர்களை பணியமர்த்த கூடாது எனவும், ஊழியர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் சென்று குடிநீர் வழங்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments