கொரோனா தடுப்பின் தீவிரத்தை மக்கள் உணரவில்லை என்ற பிரதமரின் கருத்தை முழுமையாக ஏற்பதாக கெஜ்ரிவால் கருத்து

0 8199

கொரோனா தடுப்பின் தீவிரத்தை மக்கள் உணரவில்லை என பிரதமர் தெரிவித்ததை தான் ஒப்புக்கொள்வதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துளார்.

நாடு முழுதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் அதன் தீவிரத்தை பலரும் உணரவில்லை என பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார். உத்தரவுகளை தீவிரத்துடன் பின்பற்றி மக்கள் தங்களளை பாதுகாத்துக் கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டிவிட்டர் பதிவில் பிரதமரின் கருத்தை முழுமையாக ஏற்பதாகத் தெரிவித்துள்ளார். மக்களில் பலர் கட்டுப்பாடுகளுக்கு உடன்படவில்லை என்றும் இது ஒவ்வொருவருடைய வாழ்க்கையையும் பாதிக்கும் என்பதால் சட்டங்கள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments