மத்திய பிரதேச முதலமைச்சராக சிவராஜ் சிங் சவுகான் இன்று பதவியேற்பு

0 2588

மத்திய பிரதேச முதலமைச்சராக சிவராஜ் சிங் சவுகான் இன்று இரவு 9 மணிக்கு பதவியேற்கிறார்.

ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவு எம்.எல்.ஏக்கள் 22 பேர் பதவி விலகியதை அடுத்து காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்த நிலையில், கடந்த 20ம் தேதி கமல்நாத் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து பாஜக மாநில தலைவரான சிவராஜ் சிங் சவுகான் மத்திய பிரதேச முதலமைச்சராக பதவியேற்பார் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் தலைநகர் போபாலிலுள்ள ஆளுநர் மாளிகையில் சிவராஜ் சிங் சவுகான் இன்று இரவு 9 மணிக்கு பதவியேற்கவுள்ளார்.  சிவராஜ் சிங் சவுகான் ஏற்கனவே 2003ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை மத்திய பிரதேச முதலமைச்சராக பதவி வகித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments