இந்தியாவில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு

0 6340

கொல்கத்தாவில் 55 வயது நபர் கொரோனா பாதிப்பால் பலியானதை அடுத்து, இந்தியாவில் பலி எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. தற்போதுவரை 415 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் மெல்ல மெல்ல தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தி வரும் சூழலில், தற்போது வரை 415 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய
சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பால் ஏற்கனவே 7 பேர் பலியாகியிருந்த நிலையில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகிலுள்ள டம்டம் பகுதியை சேர்ந்த 55 வயது நபர் இன்று உயிரிழந்தார். இதையடுத்து இந்தியாவில் பலி எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் புதிதாக 15 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 89 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் 67 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் 30 பேரும், உத்தர பிரதேசத்தில் 28 பேரும், குஜராத்தில் 29 பேரும், பஞ்சாபில் 21 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றை தடுக்கும் முயற்சியாக உள்நாட்டு விமான சேவைகளும் எந்த நேரத்திலும் நிறுத்தப்படலாம் என தெரிவித்துள்ள விமானப்போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறியுள்ளார். கொரோனாவை தடுக்க உள்நாட்டு விமானப் போக்குவரத்தை தடை செய்ய வேண்டும் என மேற்கு வங்கம், ஜார்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்கள் ஏற்கனவே மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் அதன் கிளை மருத்துவமனைகள் அனைத்திலும் வரும் 24 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை வெளிநோயாளிகள் பிரிவு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்கள் ரத்தானதால் ரயில் நிலையங்களில் உள்ள தங்கும் அறைகளில் முடங்கி உள்ள பயணிகள் முன்பதிவையும் தாண்டி அவர்கள் விரும்பும் வரை மேலும் சில நாட்கள் தங்கிக் கொள்ளலாம் என ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் சேவைகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை இந்த சலுகை அளிக்கப்படுவதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments