பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி..!

0 4200

கொரோனா பரவல் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் மூவாயிரத்து அறுநூறு புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது. 

சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பல நாடுகளுக்கும் பரவியதில் இருந்தே அதன் தாக்கம் வணிகம், தொழில்துறைகளில் எதிரொலித்தது. இதனால் பெட்ரோலியம் விலை வீழ்ச்சியடைந்ததுடன், உலக அளவில் பங்குச்சந்தைகளிலும் வீழ்ச்சி ஏற்பட்டது. இந்தியப் பங்குச்சந்தைகளும் 4 வாரங்களாக வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன.

இந்நிலையில் இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் இரண்டாயிரத்து 663 புள்ளிகள் வரை சரிந்தது. பகல் பன்னிரண்டரை மணிக்கு சென்செக்ஸ் மூவாயிரத்து 608 புள்ளிகள் சரிந்து 26 ஆயிரத்து 308 ஆக இருந்தது.

தேசியப் பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு நிப்டி ஆயிரத்து 37 புள்ளிகள் சரிந்து ஏழாயிரத்து 708 ஆக இருந்தது. ஒருசில வங்கிகள், நிதிநிறுவனங்கள், உலோகத் தொழில் நிறுவனங்களின் பங்கு விலை இருபது விழுக்காட்டுக்கு மேல் வீழ்ச்சியடைந்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments