திமுகவின் எம்.பி - எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஒரு மாத சம்பளத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவார்கள்

0 2968

கொரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டு உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில், திமுகவின் எம்பி - எம்எல்ஏக்கள் அனைவரும் தங்களது ஒரு மாத சம்பளத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என்று அக்கட்சியின் தலைவர்
மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கொரோனா தொடர்பாக மத்திய - மாநில அரசுகள் வெளியிடும் சுய ஊரடங்கு உள்ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் இன்று போல் என்றும் மக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என அறிக்கையொன்றில் கேட்டுக்கொண்டுள்ள அவர்.

தமிழக அரசும் உடனே போதிய நிதி ஒதுக்கீடு செய்து, அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற முன்வருமாறு வலியுறுத்தி உள்ளார். தமிழகத்தில் உள்ள தொழிலதிபர்களும் இந்த மனித நேய முயற்சியில் துணை நிற்குமாறு மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments