கொரோனாவுக்கு தண்டோராக்காரர் சூட்டிய புது பெயர்..!

0 25503

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் மக்கள் ஊரடங்கு குறித்து தண்டோரா மூலம் அறிவித்த பெரியவர் ஒருவர் கொரோனாவுக்கு புதிய பெயர் சூட்டினார்.

மக்கள் ஊரடங்கு உத்தரவு குறித்து திருவண்ணாமலை சுற்றுவட்டார கிராமங்களில் தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக ஆரணி பகுதியில் தண்டோரா போட்ட ஒருவர் அதிரடியாக ஊரடங்கு யாரும் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்று கூறிச்சென்றார்

ஆனால் பெரியவர் ஒருவர் வெள்ளந்தியாக கொரோனா என்பதை கொரு நோய் என்று நினைத்துக் கொண்டு கொரு நோய் பரவாமல் இருக்க யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த தண்டோரா போட்டுச்சென்றார்.

கொரோனாவோ... கொரு நோயோ... வீட்டுக்குள்ளே இருந்தால் நாட்டுக்கும் வீட்டுக்கும் மக்களுக்கும் நல்லது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments