கொரோனா குறித்த மக்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்க WHO வெளியிட்டுள்ள வாட்ஸ் அப் எண்

0 1238

கொரோனா குறித்த சந்தேகங்களை மக்கள் கேட்டு தெரிந்துகொள்ளும் வகையில் உலக சுகாதார நிறுவனம் வாட்ஸ் அப் எண்ணை வெளியிட்டுள்ளது.

பிளஸ் ((+))41798931892 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு ஹாய் ((HI)) என மெசேஜ் அனுப்பினால், 8 கேள்விகளை கொண்ட ஒரு மெஜேச் பதிலாக வருகிறது. அதில், தனிமனிதனை பாதுகாத்து கொள்வது, பயணங்களில் கையாள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கொரோனா குறித்த செய்திகள் உள்ளிட்ட கேள்விகள் இடம்பெற்றிருக்கின்றன.

இந்த கேள்விக்குரிய எண்ணை நாம் அழுத்தினால், அதற்கான பதிலும், விளக்கமும் உடனே வந்துவிடுகிறது. மக்களின் அச்சத்தை போக்கவும், கொரோனா வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் இந்த வாட்ஸ் அப் எண் உதவியாக இருக்கும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

Whatsapp : +41798931892

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments