தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

0 979

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் என்றும் சில இடங்களில் வானம் மேக மூட்டதுடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வெப்பச்சலனத்தால் நீலகிரி, கோவை உள்ளிட்ட மேற்குத்தொடர்ச்சி  மலையோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்ஷியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஷியசாகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments