முரசொலி நில விவகாரத்தில் ராமதாஸ் மீதான அவதூறு வழக்குக்குத் தடை

0 409

முரசொலி நில விவகாரம் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்திருப்பதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதனை கண்டித்து முரசொலி அறக்கட்டளை நிர்வாகி ஆர்.எஸ் பாரதி, ராமதாசுக்கு எதிராக எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

வழக்கில் ராமதாஸ் இன்று ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியும், தன் மீதான வழக்கு விசாரணையை ரத்து செய்ய கோரியும் ராமதாஸ் தாக்கல் செய்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களித்தும், வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை 4 வார காலத்திற்கு தள்ளிவைத்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments