சீனாவில் சுகாதாரம் சார்ந்த தொழில்நுட்பத்துடன் கூடிய வாகனங்கள் அறிமுகம்

0 1698

கொரோனா வைரஸ் பாதிப்பால் பல்வேறு படிப்பினைகள் கற்றுக் கொண்ட சீனாவில், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சுகாதாரம் சார்ந்த தொழில்நுட்பத்துடன் கூடிய வாகனங்களை வடிவமைப்பதில் கவனம் செலுத்த துவங்கியுள்ளன.

அந்த வகையில் மிகப்பெரிய BAIC ஆட்டோமொபைல் நிறுவனம், யூவி சுத்திகரிப்பு வாகனம், தடுப்பு மருந்துகளை கொண்டு செல்லும் குளிர்பதன வசதி கொண்ட வாகனம், மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்தும் வாகனம் உள்ளிட்டவற்றை வடிவமைத்துள்ளது.

ஊகானில் 5 ஜி தொழில்நுட்பத்தினாலான தானியங்கி சுத்திகரிப்பான் தெளிக்கும் வாகனம், ஓட்டுநரில்லாமலேயே தெருக்களை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. கார்களிலும் ஏசி வாயிலாகவே கிருமிநாசினிகளை தெளிக்கும் வசதி (mode) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments