சென்னையில் ரூ. 4300 கோடியில் ஸ்மார்ட் மின் மீட்டர் - முதலமைச்சர்

0 1804

சென்னையில் 42 லட்சம் மின் நுகர்வோருக்கு 4,300 கோடி ரூபாயில் ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்தப்படும் என்றும் இது பிற மாவட்டங்களுக்கு படிப்படியாக விரிவு படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.  22 மாவட்டங்களில் 110 கிலோவாட் துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் 200 கிலோ மீட்டர் மின் பாதைகள் புதைவட மின்பாதைகளாக மாற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஊரக பகுதிகளில் 350 கிலோமீட்டர் தூரத்துக்கு குறுகிய சாலைகளை மேம்படுத்தி சிமென்ட் காங்க்ரீட் சாலைகள், பேவர் பிளாக் சாலைகள் அமைக்கப்படும் என்றும் கூறினார். ஊரகப் பகுதிகளில் 1200 சிறு குறு பாலங்கள் அமைக்கப்படும் என்றும், 299 ஊரக சாலைகள் 553 கோடி ரூபாயில்  மேம்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

ஊரகப்பகுதிகளில் பள்ளி கட்டிடங்களுக்கு 440 கோடி ரூபாயில் சுற்றுச்சுவர்கள் அமைக்கப்படும் என்றும் 15 ஆயிரம் மாடு மற்றும் ஆட்டுக் கொட்டகைகள் அமைக்கப்படும் என்றும் கூறினார். விவசாய நிலங்களில் பாசன வசதிகளை பெருக்க 98 கோடியே 65 லட்சம் ரூபாயில் ஆயிரம் கிணறுகள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கபட்டுள்ளதாகவும், 25 ஆயிரம் முதியோர்  பயன் பெறும் வகையில் 5 முதல் 10 முதியோரைக் கொண்ட 12,525 முதியோர் குழுக்கள் ஏற்படுத்தப்படும் என்றும் கூறினார். சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் 1000 கோடி ரூபாயில் சாலைகள் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

சென்னையில் சிறு தொழில் முனைவோர் மற்றும் மாணவர்களின் கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தும் வகையில் 'புதுமுறை காணல் மையம்' அமைக்கப்படும் என்று அறிவித்தார். மாநகராட்சி, நகராட்சி பூங்காக்களில் திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம் மற்றும் யோகா மையம் அமைக்கப்படும் என்று கூறிய முதலமைச்சர், துப்புரவுப் பணியாளர்களை கவுரவிக்கும் வகையில் அவர்கள் தூய்மைப் பணியாளர்கள் என அழைக்கப்படுவர் என்றும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments