கொரோனாவை எதிர்கொள்ள, போர்க்கால அதிகாரங்களை வழங்கும் சட்டம் - டிரம்ப் முடிவு

0 1268

கொரோனாவை எதிர்கொள்ள, போர்க்கால அதிகாரங்களை வழங்கும் சட்டத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் 9 ஆயிரத்து 464 பேருக்கு கொரானா தொற்றியுள்ளது. இதுவரை அங்கு 155 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இதை எதிர்கொள்ள முகக்கவசங்கள், வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட கருவிகள் மற்றும் பொருட்களின் உற்பத்தி, விநியோகத்தை நேரடியாக அதிகரிக்க டிரம்ப் நிர்வாகம் அதிகரிக்க உள்ளது. இதற்கான உத்தரவுகளைப் பிறப்பிப்பதற்காக, பாதுகாப்பு கொள்முதல் சட்டத்தை பயன்படுத்த உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கும்-சோவியத் ரஷ்யாவுக்கும் பனிப்போர் நிலவிய காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த சட்டம், அரசுக்கு போர்க்கால அதிகாரங்களை வழங்குகிறது. இதை அரசு பயன்படுத்த வேண்டும் என ஏற்கெனவே பல அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தி வந்த நிலையில், டிரம்ப் அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் கனடா நாட்டுடனான எல்லை இருதரப்பு ஒப்புதலுடன் தற்காலிகமாக மூடப்படுவதாகவும் அமெரிக்க அதிபர் அறிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments