பெங்களூருவில் இருந்து கோவை வந்த கல்லூரி மாணவிக்கு கொரோனா அறிகுறி ?

0 2157

பெங்களூருவில் இருந்து வந்த கல்லூரி மாணவிக்கு கொரோனா அறிகுறி இருக்கலாம் என்ற சந்தேகத்தில், கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

சூலூர் அடுத்த காங்கேயம்பாளையத்தைச் சேர்ந்த ரஞ்சினி என்ற மாணவி, பெங்களூருவில் உள்ள பொறியியல் கல்லூரியில் பயின்று வந்த நிலையில், கடந்த வாரம் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.

சளி, தொண்டை வறட்சி பிரச்சனை இருந்ததால் சூலூர் அரசு மருத்துவமனையில் மூன்று நாட்கள் சிகிச்சை பெற்ற அவர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையின் கொரோனா சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு கொரோனா அறிகுறி தென்படுகிறதா என தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments