இந்தியாவில் மெல்ல மெல்ல கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

0 11659

இந்தியாவில் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 151ஆக அதிகரித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு, நாடாளுமன்ற நிலைக்குழு பாராட்டுத் தெரிவித்துள்ளது. 

இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்தவர்களால், இந்தியாவில் கொரோனா தொற்றுநோய் பரவி வருகிறது. நாட்டிலேயே, அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 42 பேரும், கேரளாவில் 27 பேரும் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரானாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 151ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஸ்பெயினில் இருந்து பெங்களூர் வந்த 2 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம், கர்நாடக மாநிலத்தில் கொரானாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது.

பெங்களூர் மாநகரின் ராஜாஜிநகர் பகுதியில் உள்ள உலக பிரசித்தி பெற்ற கிருஷ்ணர் கோவிலில் ஒன்றான இஸ்கான் கோவில், மறுதேதி குறிப்பிடாமல் மூடப்பட்டுள்ளது. ஸ்ரீ வைஷ்ணவ தேவி கோவில் மூடப்படுவதோடு, புனித பயணத்திற்கு தற்காலிக தடை விதிக்கப்படுவதாக, ஜம்மு-காஷ்மீர் அரசு அறிவித்திருக்கிறது. அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு கூட்டமாக வர வேண்டாம் என பஞ்சாப் அரசு அறிவுறுத்தியுள்ளது. ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் தர்காவுக்கு ((Ajmer Sharif Dargah)) வருவோருக்கு தெர்மல் ஸ்கீரினிங் மேற்கொள்ளப்படுகிறது.

ஆந்திர பிரதேசத்தில், கொரோனா தடுப்பு எதிரொலியாக, அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூட, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

அனைத்து வகை ராணுவ பயிற்சிகளையும், போர் பயிற்சிகளையும் ஒத்திவைத்துள்ள இந்திய ராணுவம், தனது வீரர்கள், அதிகாரிகளின் விடுமுறைகளை ரத்து செய்துள்ளது. லடாக்கில், பணியில் உள்ள ராணுவ வீரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, கர்நாடக முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா ((BS Yediyurappa)) அறிவித்துள்ளார்.

இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு, நாடாளுமன்ற நிலைக்குழு பாராட்டுத் தெரிவித்திருக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments