கடந்த 2 ஆண்டுகளாக ஐசிஎப் பெட்டிகள் தயாரிக்கப்படவில்லை - பியூஷ் கோயல் தகவல்

0 982

2014 முதல் 2019ஆம் ஆண்டு வரை ஒன்பதாயிரத்து 932 எல்எச்பி ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

ஐசிஎப் பெட்டிகளைக் கொண்ட ரயில்கள் மணிக்கு 110 கிலோமீட்டர் வரையும், எல்எச்பி பெட்டிகளைக் கொண்ட ரயில்கள் மணிக்கு 160 கிலோமீட்டர் வரையும் வேகத்தில் செல்லும். இதனால் ஐசிஎப் பெட்டிகளுக்குப் பதில் எல்எச்பி பெட்டிகளைக் கொண்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மாநிலங்களவையில் பேசிய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், 2009 முதல் 2014 வரையுள்ள காலத்தில் மொத்தம் 1866 எல்எச்பி பெட்டிகள் தயாரிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

2014 முதல் 2019 வரையுள்ள காலத்தில் ஒன்பதாயிரத்து 932 எல்எச்பி பெட்டிகள் தயாரிக்கப்பட்டதாகவும், கடந்த 2 ஆண்டுகளாக ஐசிஎப் பெட்டிகள் தயாரிக்கப்படவில்லை எனவும் பியூஷ் கோயல் குறிப்பிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments