மருத்துவமனைகளாக மாற்றப்பட்ட ராணுவக் கப்பல்கள்

0 3323

அமெரிக்காவில் கொரோனா பரவி வரும் நிலையில் அந்நாடு இரண்டு ராணுவக் கப்பல்களையே மருத்துவமனைகளாக மாற்றி வருகிறது.

USNS comfort மற்றும் USNS mercy ஆகிய இரண்டு கப்பல்கள் மருத்துவமனைகளாக மாற்றப்படுகின்றன. உள்ளூர் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தால் இந்த இரண்டு கப்பல்களும் நடமாடும் மருத்துவமனைகளாக மாற்றப்படும்.

நியுயார்க், வாஷிங்டன் ஆகிய இருபெரும் நகரங்களுக்கும் இந்த கப்பல்களின் மருத்துவ சேவை தேவைப்படலாம். ஒவ்வொரு கப்பலிலும் ஆயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வசதி உள்ளது.

இதன் மூலம் மருத்துவமனைகளுக்கு உள்ள நெருக்கடியைக் குறைக்க இயலும். ஒரு கப்பல் நார்ஃபோல்க் துறைமுகத்திலும் இன்னொரு கப்பல் சாண்டியாகோ துறைமுகத்திலும் நிறுத்தப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments