மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்த 40 சதவீதம் பேர் துபாய் சென்று வந்தவர்கள் என புதிய தகவல்

0 7781

மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையில் 40 சதவீதம் பேர், துபாய் சுற்றுலா சென்றுவிட்டு திரும்பி வந்தவர்கள் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்த 39 பேரில், 36 பேர் அந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள்.  எஞ்சிய 3 பேர் வெளிநாட்டினர் ஆவர். அந்த 39 பேரில் 40 சதவீதம் பேர், அபுதாபி மற்றும் துபாய்க்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பி வந்தவர்கள் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. 

அபுதாபி, துபாய்க்கு கடந்த மாதம் 24ம் தேதி சுற்றுலா சென்ற 40 பேர், கடந்த 1ம் தேதி திரும்பி வந்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 15 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. துபாயில் இருந்து திரும்பியதும் மாநிலத்திலுள்ள 10 மாவட்டங்களுக்கும் அவர்கள் சென்றபோது சுமார் 300 பேருடன் தொடர்பில் இருந்துள்ளனர்.  இதையடுத்து அவர்களை அடையாளம் காணும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments