புதிதாக 14 ஆயிரம் பேருக்கு கொரானா - WHO அதிர்ச்சி தகவல்

0 8565

கடந்த 24 மணி நேரத்தில் உலக அளவில், புதிதாக 14 ஆயிரம் பேருக்கு கொரானா தொற்றியுள்ளதாக, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 1 லட்சத்து 82 ஆயிரத்து 611 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 7 ஆயிரத்து 171 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனாவுக்கு எதிரான போர்க் களத்தில் இருப்பதாகக் கூறியுள்ள ஃபிரான்ஸ், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஃபிரான்சில் 6 ஆயிரத்து 633 பேருக்கு கொரானா பாதிப்பு உள்ளது. அங்கு இதுவரை 148 பேர் உயிரிழந்துள்ளனர்.

உணவு, மருந்துகள் வாங்கச் செல்வது, பணிக்கு செல்வது, நடைப் பயிற்சி செல்வது தவிர்த்த வேறு எந்த காரணத்திற்காகவும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என ஃபிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கூறியுள்ளார்.

குறைந்தது அடுத்த 15 நாட்களுக்கு பயணங்கள், வெளியே செல்வது பெருமளவு குறைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். அவசியத் தேவைகள் தவிர்த்து வேறு எதற்காகவும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும், வீட்டில் இருந்து பணியாற்ற முடியாத சூழலில் மட்டும் அலுவலகம் செல்லுமாறும் மேக்ரான் கேட்டுக்கொண்டுள்ளார். வீடுகளில் விசேஷங்களுக்காக கூடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார். நாம் போர்க் களத்தில் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது என்றும் ஃபிரான்ஸ் அதிபர் மேக்ரான் கூறியுள்ளார்.

கட்டுப்பாடுகளை அமல்படுத்தவும், சோதனை சாவடிகளில் கண்காணிக்கவும் ஒரு லட்சம் போலீசார் களமிறக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, இத்தாலி, ஸ்பெயினை தொடர்ந்து ஃபிரான்சும் போக்குவரத்து, மக்கள் நடமாட்டத்தை முடக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 

அர்ஜென்டினா:

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டு எல்லைகளை மூடி வருகின்றன.
தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் 65 பேர் வைரசால் பாதிக்கப்பட்டு, 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் வைரஸ் பரவுவதை தடுக்க நாட்டின் எல்லைகளை அடுத்த 15 நாட்களுக்கு மூட அரசு முடிவு செய்துள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

சான் பிரான்சிஸ்கோ:

அமெரிக்க பொருளாதாரத்திற்கு சக்திமையம் எனக் குறிப்பிடப்படும், சான் பிரான்சிஸ்கோ பகுதி, கொரானா வைரசால் முடங்கியுள்ளது. அமெரிக்காவில் 4 ஆயிரத்து 727 பேருக்கு கொரானா தொற்று உள்ளது. இதுவரை 93 பேர் உயிரிழந்துள்ளார். 

சான் ஃபிரான்சிஸ்கோ மற்றும் அதைச் சுற்றியுள்ள Bay Area பகுதியில், 273 பேருக்கு கொரானா பாதிப்பு உள்ளது. இதையடுத்து அங்கு வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக, மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 6 கவுன்டிகளில் 3 வாரங்களுக்கு இந்த முடக்கம் தொடங்கியுள்ளது. இந்த 6 கவுன்டிகளும், 2018ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி பொருளாதாரத்திற்கு  877 பில்லியன் டாலர்கள் பங்களிப்பு செய்துள்ளன.

இது, அமெரிக்க பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பு என்பதோடு, கலிஃபோர்னியா மாநிலத்தின் மொத்த பொருளாதாரத்தில் 30 சதவீதமாகும். சுவீடனைவிட 6 பெரிய நாடுகளின் பொருளாதாரத்தை விடவும் இது அதிகம் என்பதோடு, இத்தாலி பொருளாதாரத்தில் 50 சதவீதம் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆப்பிள், கூகுள், ஃபேஸ்புக், இன்டல், ஃபேஸ்புக் என பல்வேறு பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் சான் பிரான்சிஸ்கோ Bay Area-வில் செயல்படும் நிலையில், அவை ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளன. பயோடெக் நிறுவனங்கள், மருத்துவத்துறை நிறுவனங்கள், சுற்றுலா உள்ளிட்டவையும் முக்கிய தொழில்களாக உள்ளன.

இந்நிலையில், கொரோனா தடுப்புக்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் தொழில்கள் முடக்கம், வேலைவாய்ப்பு இழப்பு என பல பிரச்சனைகளை சான் பிரான்சிஸ்கோ Bay Area எதிர்கொண்டு வருகிறது. மேலும் இந்த பகுதியில், 28 ஆயிரம் பேருக்கு நிரந்தரமான வசிப்பிடம் ஏதும் இல்லாத நிலையில், வீடற்றவர்களுக்கு புகலிடம் அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஐரோப்பிய நாடுகளிலும், மலேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் கல்வி நிலையங்கள் மூடல், அத்தியாவசிய வர்த்தகங்கள் தவிர்த்து மற்ற அனைத்தும் மூடல், பயணக்கட்டுப்பாடுகள், வீடுகளுக்குள்ளேயே இருக்க உத்தரவு என கோடிக் கணக்கான மக்கள் முடக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை, சீனாவைவிட, சீனாவுக்கு வெளியே அதிகரித்துள்ளது.

கொரானா பரவல் தொடங்கிய சீனாவில் இதுவரை அந்த வைரசுக்கு 3 ஆயிரத்து 226 பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் மொத்த உயிரிழப்புகள் 7 ஆயிரத்து 171 ஆக உள்ளது. இதன்படி, சீனாவைவிட பிற உலக நாடுகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். 

ஐரோப்பிய நாடுகளிலும், மலேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் கல்வி நிலையங்கள் மூடல், அத்தியாவசிய வர்த்தகங்கள் தவிர்த்து மற்ற அனைத்தும் மூடல், பயணக்கட்டுப்பாடுகள், வீடுகளுக்குள்ளேயே இருக்க உத்தரவு என கோடிக் கணக்கான மக்கள் முடக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை, சீனாவைவிட, சீனாவுக்கு வெளியே அதிகரித்துள்ளது.

கொரானா பரவல் தொடங்கிய சீனாவில் இதுவரை அந்த வைரசுக்கு 3 ஆயிரத்து 226 பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் மொத்த உயிரிழப்புகள் 7 ஆயிரத்து 171 ஆக உள்ளது. இதன்படி, சீனாவைவிட பிற உலக நாடுகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments