அனில் அம்பானிக்கு அமலாக்கப் பிரிவு சம்மன்..!

0 937

நெருக்கடியில் இருக்கும் யெஸ் வங்கியில் நடந்துள்ள பண மோசடி விவகாரங்களில் ரிலையன்ஸ் குழுமத்திற்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், அதன் தலைவர் அனில் அம்பானிக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பி உள்ளது.

அனில் அம்பானி யெஸ் வங்கியில் இருந்து சுமார் ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளார். இது வாராக்கடனாக மாறி உள்ள நிலையில், யெஸ் வங்கி முன்னாள் தலைவர் ராணா கபூருடன் சேர்ந்து நடத்தப்பட்ட மோசடியாக இது இருக்கலாம் என கூறப்படுகிறது.

இதை அடுத்து  விசாரணைக்கு ஆஜராகுமாறு அனில் அம்பானிக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது. இதைப் பெற்றுக் கொண்ட அவர், உடல் நிலையைக் காரணம் காட்டி, விசாரணைக்கு ஆஜராக கூடுதல் அவகாசம் கேட்டுக் கொண்டுள்ளதாக அமலாக்கப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments