தமிழக சட்டசபை 2 நாட்களுக்கு பின் இன்று கூடுகிறது

0 564

தமிழக சட்டசபையில் இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி மற்றும் நகராட்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.

2 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது. காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்படும்.

உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். தொடர்ந்து சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும். இதனை அடுத்து உள்ளாட்சி மற்றும் நகராட்சி நிர்வாகம் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.

உறுப்பினர்களின் விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்.தொடர்ந்து நாளை மீன்வளத் துறை, கால்நடை பராமரிப்பு துறை மீதான விவாதம் நடைபெறும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments