கொரானாவை தடுக்க 20 மில்லியன் டாலர்கள் நன்கொடை வழங்கியது FACEBOOK நிறுவனம்

0 1236

கொரானா பாதிப்பை தடுக்க பேஸ்புக் நிறுவனம் 20 மில்லியன் டாலர்கள் நன்கொடை வழங்கி உள்ளது. 

உலகம் முழுவதும் கொரானா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் அதை தடுப்பதற்காக உலக நாடுகள் அனைத்தும் தீவிரமான முயற்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

மேலும் பல்வேறு தனியார் நிறுவனங்களும் கொரானா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிதிகளை அளித்து வருகின்றன. அந்த வகையில் பேஸ்புக் நிறுவனம் கொரோனா தடுப்பிற்காக 20 மில்லியன் டாலர்கள் நிதி அளித்துள்ளது.

இந்த அறிவிப்பை பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டார் அதில் கொரானா தடுப்பிற்காக உலகசுகாதார அமைப்பிற்கு 10 மில்லியன் டாலரும் CTC  எனும் தொண்டு நிறுவனத்திற்கு 10 மில்லியன் டாலர் என மொத்தம் 20 மில்லியன் டாலர் நன்கொடை வழங்கும் என அந்த அறிவிப்பில் கூறியிருந்தார்.

ஏற்கனவே மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள் கொரானா பாதிப்பை தடுக்க நிதி வழங்கி உள்ளது குறிப்பிடதக்கது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments