ரயில் ,விமான, பேருந்து நிலையங்களில் பரிசோதனை நடத்த கேரள அரசு உத்தரவு

0 469

கொரானா பரவுவதைத் தடுக்க அனைத்து ரயில், விமான, பேருந்து நிலையங்களிலும் பயணிகளைக் கண்காணிக்கவும் பரிசோதிக்கவும் கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

கேரளாவின் அனைத்து சாலை மற்றும் ரயில் நிலையங்களிலும் கொரோனா வைரஸ் சோதனை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதுடன் அண்டை மாநிலமான தமிழ்நாட்டிலும் பரவக் கூடும் என அச்சம் எழுந்திருக்கிறது. இதனால் தமிழக-கேரள எல்லைப்பகுதியில் கூடுதலான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கேரளாவில் இருந்து வெளியே செல்லும் பயணிகள் மற்றும் உள்ளே வரும் பயணிகளுக்கு கொரோனா தொற்று பரவியிருக்கிறதா என்பதில் கேரள அரசு கவனத்தைத் திருப்பியுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், காவல்துறையினர், சுகாதாரக் குழுவினர் அடங்கிய குழு ஒன்று ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் பேருந்து நிலையத்திலும் பரிசோதனைகளை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார்.

ஒவ்வொரு குழுவுக்கும் டி.எஸ்.பி அந்தஸ்துடைய ஒரு அதிகாரி தலைமை வகிப்பார் என்றும் அவர் தெரிவித்தார். பாராசாலா, அரியான்காவு, வாளையார், மீனாட்சிபுரம், மாஹே, மஞ்சேஸ்வரா ஆகிய ரயில் நிலையங்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதேபோல் கேரள தமிழகம் மற்றும் கர்நாடக எல்லைப்பகுதிகளான திருவனந்தபுரம், கொல்லம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மல்லபுரம், வயநாடு, கண்ணூர், காசர்கோடு பேருந்து நிலையங்களிலும் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.

கொச்சி விமான நிலையத்தில் அதிகளவில் வெளிநாடுகளின் பயணிகள் வருகையை முன்னிட்டு 4 விமான நிலையங்களிலும் பரிசோதனைகள் நடத்த மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments