பாகிஸ்தானிலுள்ள மருந்தகங்களில் விற்றுத் தீர்ந்து வரும் முகக்கவசங்கள்

0 843

கொரானா அச்சுறுத்தலால் பாகிஸ்தானிலுள்ள மருந்தகங்களில் முகக்கவசங்கள் விற்றுத் தீர்ந்து வருவதோடு, சானிடைசர்களின் விலையும் அதிகரித்துள்ளது.

28 பேர் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள பாகிஸ்தான் அரசு, ஈரான், சீனா எல்லைகளை மூடியுள்ளது. இதனிடையே முகக்கவசங்களையும், சானிடைசர்களையும் மக்கள் அதிகளவில் வாங்குவதால், அவற்றின் விலை உயர்ந்துள்ளது.

சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள், பற்றாக்குறையை தவிர்ப்பதற்காக தேவையிருந்தாலொழிய மாஸ்க் அணியவேண்டாம் என கூறியுள்ளன. தென்கொரியா போன்ற நாடுகள் அனைவரும் மாஸ்க் அணிவதை வலியுறுத்துகின்றன. அதே சமயம் தவறாக பயன்படுத்தினால், மாஸ்குகளின் மூலமே நோய்த்தொற்று அதிகரிக்கும் என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments